மானிடா...சற்றே நினைத்து பார்,
அவளின் பாசத்திற்கு யார் தான் நிகர் ?
பெற்றெடுக்கவில்லை என்றாலும்,
தத்தெடுத்தால் நம் அன்னை...
நாம் யாவரும் தனி ரகம்-
இருந்தும் ஊக்குவித்தால் நம் அன்னை ...
ஆம் ...
தொட்டிலிடும் வயதில் -
நமக்கே உண்டான மொழியில் தாலாட்டு பாடினால் ...
வளரும் பருவத்தில் அவள் நமக்கு -
அணிவித்து அழகு பார்த்த துணி ரகங்கள் தான் எத்தனை ...
அண்ணனுக்கு பட்டு துணி ,
உடன் பிறந்தவளுக்கு பனாரஸ் புடவை ,
தம்பிக்கு கதர் சட்டை,
கடை குட்டி மகளுக்கு காஞ்சி பட்டில் பாவாடை ....
மானிடா...சற்றே நினைத்து பார்,
அவளின் பாசத்திற்கு யார் தான் நிகர் ?
உண்ணும் பழக்கமும் வேறுபட ,
ருசி அறிந்து உணவு கொடுத்தால் ...
அண்ணனுக்கு பச்சரிசி சாதம் ,
உடன் பிறந்தவளுக்கு கோதுமை ரொட்டி ,
தம்பிக்கு தானிய வகைகள் ,
கடை குட்டி மகளுக்கு கீரை வகைகள் ...
மானிடா...சற்றே நினைத்து பார்,
அவளின் பாசத்திற்கு யார் தான் நிகர் ?
நாம் மொழி பற்றில் வேறுபட்டோம் -
பற்றறிந்து கற்று கொடுத்தால் ...
அண்ணனுக்கு செந்தமிழும் ,
உடன் பிறந்தவளுக்கு வட மொழியும் ,
தம்பிக்கு கொஞ்சி பேசும் மலையாளமும் ,
கடை குட்டி மகளுக்கு ஆங்கிலமும் ...
மானிடா...சற்றே நினைத்து பார்,
அவளின் பாசத்திற்கு யார் தான் நிகர் ?
இப்படி பல வேற்றுமைகள் இருந்தும் ,
சமமாக அரவணைத்தால் நம் அன்னை...
நம் இஷ்ட்ட தெய்வங்கள் எதுவாயினும் ,
முறையே கும்பிட கற்றுகொடுத்தால் ...
வேற்றுமையிலும் ஒற்றுமையை காண,
ஊட்டி வளர்த்தால் நம் அன்னை...
மானிடா...சற்றே நினைத்து பார்,
அவளின் பாசத்திற்கு யார் தான் நிகர் ?
நிகரற்ற அவளின் பாசத்திற்கு,
நாம் ஆற்றும் ஓர் செய்நன்றி -
அவள் கற்பித்த இந்த பாரம்பரியம்,
என்றும் நிலைக்கதக்க நாம் நடப்பது ...
அவள் வகுத்த ஒற்றுமை பாதையில்,
வழி நடந்து பறைசாற்றுவோம்-
அவளின் பெருமையை...
ஆம்
அவள் வகுத்த ஒற்றுமை பாதையில் ,
வழி நடந்து பறைசாற்றுவோம்-
நம் அன்னையின் பெருமையை ...
வாழ்க என் அன்னை ...
வாழ்க என் பாரதத்தாய் ...
வந்தே மாதரம் !!
இனிய குடியரசுதின வாழ்த்துக்கள் ...