Wednesday, November 16, 2011

On The Contrary


A blessing in disguise
Is what they perceive
For they know not
The bane behind boon...
"She is an ideal girl"-
Words that spread out
With waves of zeal
Though not moving her...
Yes...as they say,
She is a perfect blend
With numbers in mind,
Spirituality at heart,
Solutions in lips,
With an extending arm
Ready to help at once...
Sure to inspire them,
With the questions she pose
Stammering the reader for a while,
At time with solutions too!!
Off late...
She fades for a day
To find them say
The day next though
That her presence they miss...
Her presence they miss...
For the absolute silence
In the class though prior
Getting wordy sans her questions...
For the world outside
She shines as top hat
Be it in words or symbols
For the art is at her feet...
Forgetting the loads of expectations
Burdened on her heart...
Her laurels do invite
People towards her-for
Getting their doubts vanished
Accompanying thus for a moment...
Yes...they need her
For the wits she possess
For the patience she shows
Whilst getting the queries washed...
Huh!!Her presence they miss...
On the contrary...
There she is-with
Her mind in limbo
Flashes of those eternal words
Crawling through every second
Popping out the mayhem
Making her think thus
As though every little speck
That looms to her
Have the notion about her
As a lively software
To solve their qualm
Rather treat as a girl
To share a heartfelt talk...
Top of Form
Bottom of Form

Saturday, May 21, 2011

மாற்றங்கள் இருப்பினும் மாறாதது ...

மாற்றங்கள் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையில் ,
       நம்மை மாற்றும் ஆற்றலும் ,
           நம் பிணைப்பு மாறாத ஆற்றலையும் கொண்ட உறவு ,
                 நம் நட்பு...


தத்தி தவழும் பிள்ளையாய் ,
காலடி எடுத்து வைத்தோம் கல்லூரி வாசலில் ....
முகவரி அறியாமல், முகம் காண முனைந்தோம் ...
முகம் கண்ட பின், மனம் அறிந்தோம் ...
மனம் அறிந்ததால், புரிதலில் பினைந்தோம் ...


இன்று ...

புரிதலினால் , பிரிவு நம்மை பினமாக்க, 
நட்பென்னும் சுவாசத்தினால் உயிர் கொண்டிருக்கிறோம் ...

காலங்கள் மாறினாலும் , 
காலம் கடந்த நம் நட்பு மாறாது ...

நீயும், நானும் , இனி வேறு பாதையில் ...
இருந்தும் ...

காலம் கடந்து நாம் எண்ணிப்பார்க்கையில் ,
இதமாய் வருடிச்செல்லும்  இந்த நினைவுகள் ,
மீண்டும் உயிர்பெறும் நம் இதழோர புன்னகையில் ...

Wednesday, May 4, 2011

சில வார்த்தைகள்...



இயற்கை அழகு,
அதை மேலும் அழகாக்கும் மான்கள் ...
இதமான தென்றல் காற்று ,
அதை மேலும் இதமாக்கும் மழைச்சாரல் ...
அளவான கண்டிப்பு ,
அதை மேலும் மிகை படுத்தும் சிறு குறும்புகள் ...
ஆழமான நட்பு ,
அதை மேலும் ஆழப்படுத்தும் சின்ன சின்ன சண்டைகள் ...

ஆம் ...
இயற்கை அழகு,
இதமான தென்றல் காற்று ,
அளவான கண்டிப்பு ,
ஆழமான நட்பு ...
இவையெல்லாம் இனி ,
           வெறும் கானல் நீராய் ....

விட்டு பிரிய மனமில்லாமல் ,
நேசித்த தருங்களும் ,
சுவாசித்த நட்பையும் ,
நிலையாய் , நெஞ்சில் நிறுத்தி ,
பிரிய மனமில்லாமல் விடை பெறுகிறேன் ...

மீண்டும் இக்கல்லூரிச்சாரலில் நனையும் ஏக்கத்தில் ...

Tuesday, January 25, 2011

வாழ்க பாரதம் !!

மானிடா...சற்றே நினைத்து பார், 
அவளின் பாசத்திற்கு யார் தான் நிகர் ?

பெற்றெடுக்கவில்லை என்றாலும், 
தத்தெடுத்தால் நம்  அன்னை...
நாம்  யாவரும் தனி ரகம்-
இருந்தும் ஊக்குவித்தால் நம் அன்னை ...

ஆம் ...
தொட்டிலிடும் வயதில் -
நமக்கே உண்டான மொழியில் தாலாட்டு பாடினால் ...
வளரும் பருவத்தில் அவள் நமக்கு -
அணிவித்து அழகு பார்த்த துணி ரகங்கள் தான் எத்தனை ...

அண்ணனுக்கு பட்டு துணி ,
உடன் பிறந்தவளுக்கு பனாரஸ் புடவை ,
தம்பிக்கு கதர் சட்டை,
கடை குட்டி மகளுக்கு காஞ்சி பட்டில் பாவாடை ....

மானிடா...சற்றே நினைத்து பார், 
அவளின் பாசத்திற்கு யார் தான் நிகர் ?

உண்ணும் பழக்கமும் வேறுபட ,
ருசி அறிந்து உணவு கொடுத்தால் ...

அண்ணனுக்கு பச்சரிசி சாதம் ,
உடன் பிறந்தவளுக்கு கோதுமை ரொட்டி ,
தம்பிக்கு தானிய வகைகள் ,
கடை குட்டி மகளுக்கு கீரை வகைகள் ...

மானிடா...சற்றே நினைத்து பார், 
அவளின் பாசத்திற்கு யார் தான் நிகர் ?

நாம் மொழி பற்றில் வேறுபட்டோம் -
பற்றறிந்து கற்று கொடுத்தால் ...

அண்ணனுக்கு செந்தமிழும் ,
உடன் பிறந்தவளுக்கு வட மொழியும் ,
தம்பிக்கு கொஞ்சி பேசும் மலையாளமும் ,
கடை குட்டி மகளுக்கு ஆங்கிலமும் ...

மானிடா...சற்றே நினைத்து பார், 
அவளின் பாசத்திற்கு யார் தான் நிகர் ?

இப்படி பல வேற்றுமைகள் இருந்தும் ,
சமமாக அரவணைத்தால் நம் அன்னை... 
நம் இஷ்ட்ட தெய்வங்கள் எதுவாயினும் ,
முறையே கும்பிட  கற்றுகொடுத்தால் ...

வேற்றுமையிலும் ஒற்றுமையை காண, 
ஊட்டி  வளர்த்தால் நம் அன்னை...

மானிடா...சற்றே நினைத்து பார், 
அவளின் பாசத்திற்கு யார் தான் நிகர் ?

நிகரற்ற  அவளின்  பாசத்திற்கு, 
நாம் ஆற்றும்  ஓர்  செய்நன்றி -
அவள்  கற்பித்த  இந்த  பாரம்பரியம், 
என்றும்  நிலைக்கதக்க  நாம் நடப்பது ...

அவள்  வகுத்த  ஒற்றுமை  பாதையில்,
வழி  நடந்து  பறைசாற்றுவோம்- 
அவளின் பெருமையை...

ஆம் 
அவள்  வகுத்த  ஒற்றுமை  பாதையில் ,
வழி  நடந்து  பறைசாற்றுவோம்-
நம் அன்னையின்  பெருமையை ...

வாழ்க என் அன்னை ...
வாழ்க என்  பாரதத்தாய் ...

வந்தே  மாதரம் !!

இனிய குடியரசுதின வாழ்த்துக்கள் ...