தூரமாய் அவள் தெரிகையில்,
துள்ளி எழுந்தது என் மனம்...
தொலைவினில் இருப்பினும் அவளின் பிரகாசம்,
என் இதயத்தில் ஒளி வீசிச் சென்றன...
அவள் கூக்குரலிட்டு என்னை நெருங்க,
எனது இதயத் துடிப்பு பல மடங்கு ஆகின...
அருகில் துணைவி துணை நிற்க,
என் மனம் ஏனோ அவளையே நாடின...
துணைவியின் பேச்சை விட - அவளின்
கூக்குரல் எனக்கு இனிமையாய் ஒலித்தன...
அவளின் வளைவுகளை ரசித்து நிற்க - அவளோ
என் அருகில் தயங்கியபடியே வந்தாள்...
அவளின் வேகமோ குறைந்தது,
ஆனால் அவள் செய்த மாயம் - ஏனோ
என் இதயத்தை வேகமாகத் துடிக்கச் செய்தது.
அவள் அருகே செல்ல துடிக்கையில்,
என் துனைவியே என் கையைப் பிடித்து,
அவளிடம் அழைத்துச் சென்றாள்!!
திகைத்து நின்ற நான்,
என் துணைவியுடன் ஏறினேன்,
என் முதல் காதலான "" புகைவண்டியில் "!
துள்ளி எழுந்தது என் மனம்...
தொலைவினில் இருப்பினும் அவளின் பிரகாசம்,
என் இதயத்தில் ஒளி வீசிச் சென்றன...
அவள் கூக்குரலிட்டு என்னை நெருங்க,
எனது இதயத் துடிப்பு பல மடங்கு ஆகின...
அருகில் துணைவி துணை நிற்க,
என் மனம் ஏனோ அவளையே நாடின...
துணைவியின் பேச்சை விட - அவளின்
கூக்குரல் எனக்கு இனிமையாய் ஒலித்தன...
அவளின் வளைவுகளை ரசித்து நிற்க - அவளோ
என் அருகில் தயங்கியபடியே வந்தாள்...
அவளின் வேகமோ குறைந்தது,
ஆனால் அவள் செய்த மாயம் - ஏனோ
என் இதயத்தை வேகமாகத் துடிக்கச் செய்தது.
அவள் அருகே செல்ல துடிக்கையில்,
என் துனைவியே என் கையைப் பிடித்து,
அவளிடம் அழைத்துச் சென்றாள்!!
திகைத்து நின்ற நான்,
என் துணைவியுடன் ஏறினேன்,
என் முதல் காதலான "" புகைவண்டியில் "!
அருமை... முதல் காதல் ”இரயில்”...
ReplyDelete1960 & 1970 களில் இந்த சம்பவம் நிச்சயம் நடந்து இருக்கும், ஏன் 2000 வரையிலும் இது சாத்தியமாக தான் இருந்து இருக்கும்... இப்போது இது சாத்தியமா என்று தெரியவில்லை.
ஒரு கவிதையை அதன் சூழ்நிலைக்குள் சென்று ரசிக்க வேண்டும் அதை தான் இங்க நான் செய்தேன்... அழகாக முடித்துவிட்டீர்கள்... வாழ்த்துக்கள்
//ரயிலில் பயணம் செய்பவர்கள் நமக்கு எளிதில் நண்பர்களாகிவிடுவார்கள், பயணம் செய்யாத பயணாளியாக நானும் 5 வயதில் ரயில் பிண்ணாடி ஓடி கையாட்டி நண்பனான காலம் கண்ணகளில் கடந்து செல்கிறது, இந்த முதல் காதல் இரயிலால்//...