Friday, February 5, 2010

இசை ...

சீறிபாயும் அருவியின் அருகாமையில்
சில்லென்று எழும் இனிய மெல்லிசை போல்
இருண்டிருந்த என் மனதில்
யாழினும் இனிமையான உன் குரல்-
என்னுள் பறைசாற்றி சென்றன
"நானும் உறவுகொள்ள உயிர் இருப்பதாக ..."

ஆம்...
கருவறை வகுப்பாக,
தாய் குரல் தாலாட்டாக,
இசையினால் நாம் இணைந்தோம்-
தொப்புள்கொடி யாழ் ஆனதால் !!!

No comments:

Post a Comment