Saturday, July 18, 2015

பூக்காரி



வாசம் கொண்ட முல்லை மலர்கள்
அவள் வரவை எதிர்நோக்கி காத்திருந்தன ...
கொய்யபடபோகிறோம் என்றறிந்தும்
அவள் கையில் வீழவே ஆசைபட்டன...
கண்டாங்கி சேலை உடுத்தி,
கைகளில் கண்ணாடி வளையல் சிணுங்க,
அவள் தலை சாய்த்து,
இதமாய் முல்லை கொடியை வளைத்து,
மொட்டுகளை கொய்யும் அழகிலேயே,
வீழ்ந்துவிடுகின்றன-
அவள் இடுப்பின் சேலை மடிப்பில்...

கறுத்த மேனி,
கலையுள்ள அகம்,
நீண்ட கருங்கூந்தல் என,
கிராமத்து மண் வாசனை மாறா-
அழகு சிலையாய் வளைய வந்த அவள்,
தினமும் ரசித்து வந்தால்,
முல்லை மலர்களை...
அதனை லாவகமாய் பறித்து,
ஒன்றன்மீது மற்றொன்றை
நூலில் வைத்து,
விரல்களால் வளைத்து வளைத்து,
இடுக்கம்மாய் தொடுத்து,
எடுத்து பார்ப்பாள்...
நடுவே பின்னல் போட்டார் போல்
நூல் பிணைந்திருப்பதை,
அவள் தொடுத்த அழகு...

தொடுத்த பூவை
தாம்பாளத்தில் வைத்து,
தலைவன் வரும் முன்,
முகம் கழுவி,
நெற்றி இட்டு,
தலை சீவி,
பின்னல் இட்டு,
தலைவனின் வருகைக்காக,
மலர்ந்த முகத்துடன்
காத்திருப்பாள்...
தலைவன் வந்து
அவள் சிகையில்
பூசூட்ட...

அன்றும் அவள் காத்திருக்கையில்,
இருண்ட துவங்கியது...
இருண்டது மேகம் என்று நினைத்தாலள்...
அனால்,
இருண்டது அவள் வாழ்வும்தான்...
பூசூட்ட தலைவின் வருவான் என காத்திருந்தவள்,
அறியா பேதையானாள்...
தலைவன் தலை வீழ்ந்து விடவே,
புயலில் சிக்கிய முல்லை கொடியானால்...

தலைவனை தொலைத்த நிலையில்,
வாழ்க்கையின் முடிவோ என்று தத்தளித்தவள்,
மீண்டும் சென்றால்
முல்லை கொடியிடம் ...
நெற்றியில் பொட்டில்லை,
கைகளில் வலையில்லை,
கால் விரலில் மெட்டியில்லை,
இருந்தும்,
அவள் தலை சாய்த்து,
இதமாய் முல்லை கொடியை வளைத்து,
மொட்டுகளை அழகாய் கொய்து,
இடுப்பு சேலையின் மடிப்பில் சேகரித்தாள்...
தினமும் ரசித்து வந்த
முல்லை மலர்களை,
லாவகமாய் பறித்து,
ஒன்றன்மீது மற்றொன்றை
நூலில் வைத்து,
விரல்களால் வளைத்து வளைத்து,
இடுக்கம்மாய் தொடுத்து,
எடுத்து பார்த்தாள்...
நடுவே பின்னல் போட்டார் போல்
நூல் பிணைந்திருந்தது,
அவள் தொடுத்த அழகு...

தொடுத்த பூவை வைத்தால்,
இம்முறை தாம்பாளத்தில் அல்ல...
தார் கூடையில்...
பூசூட்ட தலைவன் இல்லை,
பூவைக்க ஆசை இல்லை,
பூ வாங்க காசும் இல்லை,
ஆனால்,
பூ விற்க ஆளுண்டு,
பூக்காரியாய் இவள்...
முடிவு என நினைத்த இவள்,
பூ விற்கிறாள்,
மற்றவர்களின் மங்கலமான துவக்கத்திற்கு...


















No comments:

Post a Comment